Posts

Showing posts with the label சிறுகதை

மெய் நீ

Image
குறிப்பு: ரிச்சட் ஸ்டால்மனின் "Made for You" என்கிற விஞ்ஞானப் புனைவின் மொழிபெயர்ப்பே இது. அதிகம் கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கொஞ்சம் பொறுமையோடு வாசிக்க வேண்டுகிறேன். பயன்படுத்தப்பட்ட சில முக்கிய கலைச்சொற்களை முன்னமே குறிப்பிடுவது வாசிப்பை இலகுவாக்கும் என நம்புகிறேன். virtual - மெய்நிகர் programming-  நிரலாக்கம் reprogramming- மிள்நிரலாக்கம் virtual mind - மெய்நிகர் மூளை virtual adjunct - மெய்நிகர் இணைப்பு, மெய்நிகர் பிரதி சிறுகதைக்கு பொருந்தும் வகையிலும் வாசகர்களின் இலகு புரிதலுக்காகவும் கலைச்சொல் பயன்பாட்டில் இயலுமானவரையில் இலகு நடையை பின்பற்றியிருக்கிறேன். ********************************************************************************** “அப்பழுக்கில்லாத ஒருவர் இந்த இயற்கையில் இல்லை. அப்படியான துணை உங்களுக்கானவராய் வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். தயார்செய்து தருகிறோம்.” ‘துணை’ நிறுவனத்தின் இந்த விளம்பரத்தை வாசிக்கும், வயது போய்க்கொண்டிருக்கும், காதல் மேகம் மீண்டும் தன்னைக் கடக்கும் என்ற நம்பிக்கையும் தொலைந்துபோன ஒருவனுக்கு ஆர்வம் பிறப்பது ஆச்சர...

இசையும் இளந்தளிரும்

Image
இசை இப்போதுதான் இயற்கையை ரசிக்கப் பழகிக்கொண்டிருந்தான். அவன் இன்னும் மழலை மாறாதவன். ஒரு பசுந்தளிர். மூன்றே வயது. அவன் பிறந்ததில் இருந்தே மரங்களுடனும் மலர்களுடனும்தான் வளர்ந்தான். அவனது புருவங்களின் அருகே வைக்கப்பட்ட திருஷ்டி இலைகள் தொடக்கி அவன் வருடும் செம்பருத்திப் பூ வரை, அவனைச்சுற்றி இயற்கை நிறைந்திருந்தது. வாடிய பூக்களை வருடி உயிர்கொடுப்பான். வளைந்து விழும் சிறு செடி நிமிரும்வரை அதை தாங்கிப் பிடித்தபடி நிற்பான். இயற்கையின் வண்ணத்தில் சேர்ந்த புது வண்ணம் அவன். சூழ எது இருக்கிறதோ அதையே பார்த்துக் குழந்தைகள் வளர்வதாய்ச் சொல்வது எவ்வளவு உண்மை. இயற்கையைக் காதலிக்கும் நபர்கள் சூழ அவன் வளர்ந்தான். இயற்கையை வெறும் வளமாகவும் ரசனைப் பண்டமாகவும் பார்க்கும் உலகில் இயற்கை அன்புக்காய் ஏங்குவதைக் காண்கின்ற கண்கள் வெகு குறைந்துவிட்டன. இசையினுடைய கண்களும் அப்படியானவையே. அவன் பிறந்ததிலிருந்து அவனது பிஞ்சுக் கைகளைப்பிடித்து நாட்டப்பட்ட மரங்கள் ஏராளம். அவன் நடக்கத்தொடங்கிய வயதிலேயே தன் பிஞ்சுக் கைகளால் ஒரு குட்டிக் கோப்பையில் தண்ணீரை எடுத்து குடுகுடுவென ஓடிப்போய் அந்தச் செடிகளுக்கு தண்ண...

விமான உரையாடல்கள்

Image
குறிப்பு:  இது நான் எழுதிய கதை அல்ல. தங்கை தான் பார்த்த காணொளியொன்றைப் பற்றி என்னிடம் சொன்னபோது சில மாற்றங்களோடு கதையாக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதன் வெளிப்பாடே இக்கதை. ****** விமானத்துக்குள் ஏறிய பின்னரும் கையில் புத்தகத்துடனேயே இருந்தாள் அந்தப் பத்து வயது சிறுமி. அவளுடைய பெயர் ஆருதி. ஒரு கருத்த அட்டைப் புத்தகம் அது. அவள் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்ததால் புத்தகத்தின் முன்னட்டையைப் பார்க்க முடியவில்லை. ஒரு பெரிய புத்தகம் என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது. நீண்ட நேரம் காலியாக இருந்த இருக்கையில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். அவரது பெயர் முக்கியமானதல்ல. வயது அறுபதுக்கும் மேல். இந்த விளக்கம் இப்போதைக்குப் போதும். விமானம் ஓடுபாதையில் இருந்து எழுந்து பறக்கத்தொடங்கிவிட்டது. நீண்ட நேரம் அமைதியாய் இருந்தவர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். "என் பெயர் '......', நான் '......' மதத்தின் மதகுரு" என்றார். ஆருதி அப்போதும் புத்தகத்திலேயே மூழ்கிக்கிடந்தாள். பெரியவர் மீண்டும் முயற்சித்தார். மெதுவாக இருமியவாறு, "உங்களிடம் தா...

இன்னோர் பூமியின் கடவுள்

Image
 நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா, அவருக்கு என்ன என்ன சக்திகள் எல்லா இருக்கிறது என அறிவீர்களா, அவரது கண்கள் எவ்வளவு தூரம் பார்க்க வல்லன, அவரது செவியின் துல்லியம் எவ்வளவு, அந்த மூக்குகள் சுவாசிக்கும் ஆற்றலையும் மோப்பத்திறனையும் கொண்டிருக்கின்றனவா? அடுக்கடுக்காய் கடவுள் பற்றிக் கேள்விகள் கேட்பதால் நாத்திகம் பேசும் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். இது கடவுள் பற்றிய ஒரு குட்டிக் கதை. ஈரேழு பதினான்கு உலகங்களில் ஏதோ ஒரு உலகத்தின் கடவுளின் கதை. எந்த உலகம் என்று சரியாக நினைவில் இல்லை. கதை போகின்ற வழியில் ஞாபகம் வந்தாற் சொல்கிறேன். இப்போதைக்கு வேண்டுமானால் "பூமி" என்றே வைத்துக் கொள்வோம். பூமியின் கடவுள் பற்றி என்னிலடங்காக் கதைகள் இருக்கிறது. அவர் எப்படிப்பட்டவர், எவ்வளவு சக்திவாய்ந்தவர், அவர் எப்படிக் கடவுள் ஆனார், கண் தெரியாமலே உலகை ரட்சிக்கும் அவரது வல்லமை, எனப் பல கதைகள். நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆமாம், அந்தப் பூமியின் கடவுளுக்கு கண்கள் தெரியாது. எங்கள் பூமியில் இருக்கும் சர்வ வல்லமை கொண்ட கடவுள்மார் அங்கு இல்லை, என்ன செய்வது. அந்தப் பூமியைக் காப்பாற்ற அவர் கண்களை நம்...