தன்னையே தாக்கிக்கொள்ளும் தற்காப்பு
அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் உங்கள் நீண்டகால வாசகன். இதுவரை நீங்கள் எழுதிய எதையும் நான் வாசித்ததில்லை, ஆனால் எல்லாவற்றையும் ரசித்திருக்கிறேன். சமீபத்தில் பதார்த்தன் தன் நாவலின் தலைப்பு பற்றி ஒரு நீண்ட விளக்கம் எழுதியிருந்தார். அதை வாசித்தபோது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, அதை உங்களிடம் கேட்டால் தெளிவு கிடைக்கும் என்று நினைத்தேன். அவர் முகநூலுக்குப் பதில் சொல்வதில்லை என்று தொடங்குகிறார். பிறகு முகநூல்காரர்களைப் பற்றியே கட்டுரை முழுவதும் அழுகிறார். இதைத்தான் "அலட்சியம்" என்று சொல்வார்களா? எனக்கு விளங்கவில்லை. இன்னொன்றும் கேட்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்துகிற ஒரு சொல்லை நாவலின் தலைப்பாக வைத்ததாக முகநூலில் சண்டை நடப்பதாக சொல்கிறார். அவரோ அது இழிவு அல்ல என்கிறார். ஆனால் அவர் ஆய்வில் கண்டதாக எழுதியவற்றைப் படித்தால் அது இழிவுதான் என்பது போல் தோன்றுகிறது. நான் தவறாகப் புரிந்துகொண்டேனா? அல்லது தனது கட்டுரையையே சரியாக வாசிக்காமல் பதிவேற்றிவிட்டாரா? கடைசியாக: இதையெல்லாம் நீங்கள் எழுதுவீர்களா என்று கேட்கக் கூச்சமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் எழுதியதை நான் இன்னும் வாச...