Posts

நிறக்குருடனின் மடல்

Image
அன்புள்ள அனுர, ஒரு அப்பாவி நிறக்குருடனின் மடல் இது நீங்கள் இப்போது ஒரு புதிய நிறத்தை வரிந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் எனக்கு முன்னமும் நிறக் குருடு இருந்ததால் உங்கள் பழைய நிறத்தையும் என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை மன்னிக்கவும். இப்போது இந்தக் கடிதத்தை நீங்கள் வரித்திருக்கும் நிறத்தை அறியவேண்டி வரைகிறேன். அன்புள்ள அனுர இப்போதும் நீங்கள் எல்லா இனவாதமும் ஒரேமாதிரியானவை என்றுதானா சொல்கிறீர்கள்? பேரினவாத என்ற சொல்லுக்கு இணையான சிங்களச் சொல்லை நீங்கள் இன்னமும் கண்டடையவில்லையா? எட்டை ஒன்பதாக்கியதை இப்போதும் கூட்டங்களில் பெருமையடிக்கிறீர்களா அனுர? பழைய (போர்க்)குற்றம் பற்றியும் புதிய (போர்த்)தளபதி பற்றியும் எப்போது பேசுவீர்கள் அனுர? சிதறிய தலைகள் அதைப் பார்த்து அழுத கண்கள் காணாமற்போன உறவுகள் அதைப் பார்க்கக் கிடைக்காது அழுத கண்கள் குதறப்பட்ட உடல்கள் அதைப் பார்க்க முடியாது மூடி அழுத கண்கள் எப்போது நீங்கள் பார்ப்பீர்கள் அனுர? எப்போது பேசுவீர்கள்? எப்போது அனுர? தமிழர்களுக்கு தீர்வு எனக் கேட்டால் சுயநிர்ணயம் சுயாட்சி என்ற சொற்கள...

ஆனாலும் ஜூலை கருப்புத்தான்

Image
நீங்கள் எத்தனை முறையும் வெள்ளையடிக்க முயற்சிக்கலாம். வீட்டுக்கு வண்ணம் பூசுவது போல ஒரு கோடு இரண்டு கோடு மூன்று கோடு ஏன் நான்கு கோடுகள் கூட பூசலாம். உங்கள் நீண்ட யானைக் கையால் பெரிய தூரிகை பிடித்து விரும்பிய அளவு மையிட்டு திரும்பத் திரும்பப் பூசலாம். ஆனாலும் ஜூலை கருப்புதான். மேகங்கள் அல்ல  ஆயிரம் புகைகள் அடர்ந்து திரண்டு நிலவை மறைத்துக் கருக்கிய ஜூலை. ஒரு புகை, ஒரு உயிர், ஒரு கனவு ஆயிரம் புகைகள்,  ஆயிரம் உயிர்கள், ஆயிரம் கனவுகள் சாலையின் தார் அல்ல தாரிற்கும் கீழே ஊடுருவிய குருதியில் நிலம் சிவந்து பின்பு கறுத்த ஜூலை ஒரு வாள்வீச்சு, ஒரு உயிர், ஒரு கனவு ஆயிரம் வாள்வீச்சுக்கள், ஆயிரம் உயிர்கள், ஆயிரம் கனவுகள் நீங்கள் எத்தனை முறையும் வெள்ளை அடிக்கலாம். வெள்ளை ஜூலை என விளம்பரமும் செய்யலாம் அதிக சம்பளம் அதிக சலுகை அதிகம் அதிகம் அதிகம் என்று கோடி முறை கூப்பாடு போடலாம். ஆனாலும் ஜூலை கருப்புதான். அதை கருக்கிய யானையும் வாழேந்திய சிங்கமும் எல்லாமும் கருப்புதான்.

குழந்தை வரைய ஒரு நதி

Image
குழந்தை ஒன்றின் தூரிகையிலிருந்து பிறக்கிறது ஒரு நதி. கடதாசிக்கு வெளியே நதி நீர் தெறிக்க வளைந்து செல்கிறது. கசங்கி இருந்த கடதாசி என்பதால் மேட்டு நிலம்போல் அது கிடக்க ஒவ்வொரு மேட்டையும் மேவிக் பாய்கிறது நதி. நதியினுள்ளே மீனும் நதிமேலே பூவும் கரை நெடுக நுரை முத்தம் வளைந்து செல்கிறது நதி. காடு கடந்து வயல் கடந்து கடதாசியின் கரையைத் தொட்டு அருவியாகிறது. அகலமாய் நிளமாய் குழந்தைகள் கொண்டாட ஒவ்வொரு அடுக்கையும் ஒன்றிற்கு கொடுத்திருக்கும் குழந்தை வரைந்த நதி. ஒற்றையைத் திருப்பி பிற்குறிப்பை சேர்த்து கோப்பிடுகிறது குழந்தை, தொலைந்து போன என் நதியைக் கண்டால் கூட்டி வாருங்கள் என்னிடத்தில்.

ஆக்கிரமிப்பு

Image
எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தான் அமரும் நாட்காலிகளை தனது என்று அடம்பிடிக்கும். அருகில் போனால் உறுமும். பயமுறுத்தி கதிரையில் ஒய்யாரமாய் சுருண்டு படுக்கும். சிலகாலம் முன்பு சிறுநீரை அதன் உடமையை நிறுவும் கருவியாய் அது பயன்படுத்திய நினைவு இருக்கிறது. சரியாய் சொல்வதானால்  அந்தச் சிலகாலம் ஒரு தசாப்தமாக இருக்கலாம். நிலத்தை கால்களால் தோண்டி தானே வைத்த எலும்புகளை மீளத்தோண்டி அந்த இடத்திலேயே படுத்துக் கிடக்கும் பழக்கமும் இன்றளவும் இருக்கிறது. பற்கள் நறுக உறுமும் வாய் நிலம் தோண்டும் கால்கள் சிறுநீர் கழிக்கும் குறி என உறுப்புகள் வெறும் உத்திகளே செயல் மட்டும் எல்லாக் காலத்திலும் ஒன்றே.

கடவுள் இருப்பாராக...

மரணமும் மரணத்தின் மீதான பயமும் மரணத்தின் பின்னரான நிச்சயமின்மை குறித்த அச்சமும்தான் கடவுளை இன்று வரை காப்பாற்றி கொண்டிருக்கிறது, என நீண்ட காலத்திற்கு முன்பு வரை நம்பியிருந்தேன். ஆனால் அது உண்மையாகத் தெரியவில்லை. மனிதர்கள் மரணத்தை விடவும் வாழ்வைப் பார்த்தே மிகவும் அஞ்சுகிறார்கள். கையறு நிலை தான் கடவுளையும் கோயில்களையும் இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை. எங்களுக்கு ஒரு துன்பம் வரும்போத ு எங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அதை சொல்வதற்கு இன்னொருவரை தேடுகிறோம். நாங்கள் எங்களது பிரச்சினையை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அதை தங்களுடைய பிரச்சனைகளுடன் ஒப்பிட்டு இதற்காகவா கவலைப்படுகிறாய் என்று சொல்லாத ஒரு நபரை, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, உனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, இது நீயாக தேடி கொண்டது என்று சொல்லாத ஒரு நபரை நாங்கள் எல்லோரும் தேடுகிறோம். குறைந்தபட்சம் நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபரை தேடுகிறோம்.  அப்படியான மனிதர்க...

சிகப்பை கண்டு அஞ்சுங்கள் நண்பரே...

Image
சிகப்பை கண்டு அஞ்சுங்கள் நண்பரே ஏனெனில் அது உங்கள் தலைவர்களை கனவிலும் நினைவிலும் பயமூட்டும் நிறம் சிகப்பைக் கண்டு அஞ்சுங்கள் நண்பரே அது உங்கள் தலைவர்களின் சுய நிறத்திற்கு எதிரான நிறம் சிகப்பைக் கண்டு அஞ்சுங்கள் நண்பரே அது உங்கள் தலைவர்களின் முகத்திரைகளையும் சிலவேளை உங்கள் முகத்திரைகளையும் கிழிக்கும் நிறம் சிகப்பைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குங்கள் நண்பரே உங்கள் தலைவர்களில் எஜமான்களுக்கு பிடிக்காத நிறம். சிகப்பை கையில் ஏந்துங்கள் தோழரே அது உங்களின் நிறம் எங்களின் நிறம் எங்கள் விடுதலையின் நிறம்

திருடுபோன நிலங்களின் ஆன்மாவைக் உற்றுக் கேட்டல்.

Image
நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். பலவிடயங்களைப் பேசு பொருளாக்கக்கூடிய கவிதைகள் நிறைந்த நூல்.