முதலாவது கல்

நான் ஒன்றும் இயேசு அல்லன்
பாவம் செய்யாதவர்
முதலாவது கல்லை எறியுங்கள்
என்று சொல்லிவிட்டுப் போக 
நீ ஒடுக்கப்படுகிறாயா
ஒடுக்குமுறை உனக்கு வலிக்கிறதா
முதலாவது கல்லை எறிய
நீயே சிறந்தவள்

பாலஸ்தீனத்தின் கல்லும்
காஷ்மீரின் கல்லும்
இந்தத் தூத்துக்குடியின் கல்லும்
வெறும் கல் அல்ல
குருதி படிந்த
விடுதலையின் முதலாவது கல்

ஒடித்து வீழ்த்தப்பட்ட
உன் வலுவிழந்த கைகளால்
ஒரு கல்லை எடு
பலம் இல்லாது போயினும் பரவாயில்லை
எட்டும் வரை ஏறி
விடுதலையின்
முதலாவது கல்லை எறி

ஒடித்து விழுத்தப்பட்ட கைகளின்
வலிமையை உலக அறியட்டும்

Comments

Popular posts from this blog

பாதீடு 2025: IMF சிறைக்குள் அனுசரித்தலும் பொருந்திப்போதலும்

நிறக்குருடனின் மடல்

மலையின் பெயர் என்ன?