ஒரு நீண்ட பயணத்தை முடித்து வீடு வந்திருந்தேன். படிப்பதற்காக கொழும்புக்குச் சென்றதிலிருந்து என்னவோ நான் வீட்டுக்கு விருந்தினன் போல மாறிப் போய்விட்டேன். மாதம் ஒருமுறையோ, சிலவேளை இருமாதத்திற்கு ஒருமுறையோதான் வீடு. இந்த ஏழு வருடங்களும் அப்படித்தான் கழிந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் வீட்டுக்கு வந்தேன். வீட்டாரின் வழமையான எல்லாவற்றையும் தாண்டி எனது கதிரையில் வந்து அமர்ந்தேன். இந்தக் கதிரை இன்னாருக்கு என வீட்டில் யாருக்கும் பட்டயங்கள் எழுதியிருக்கவில்லை ஆனாலும் நான் வீட்டிலிருக்கும் பொழுதில் அது என்னுடைய கதிரைதான். அதனால்த்தான் வீடு வந்ததும் முன்னுக்கே இருந்த நான்கு கதிரைகள் தாண்டி அந்தக் கதிரையில் வந்து அமர்ந்தேன். அமர்ந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். எனதருகே வந்தது எங்கள் வீட்டுப் பூனை. நான் எப்போதும் அதை என்னுடைய பூனையாகக் கொண்டாடியதில்லை. அதுவும் தான். பசித்தால் அருகில் வரும் நான் உணவு வைப்பேன். அவ்வளவுதான் எங்கள் உறவு. பூனை எங்கள் வீட்டிற்கு வந்த பன்னிரண்டு வருடங்களில் இது மாறியிருக்கவில்லை. இன்று மாறியது. எனதருகில் வந்து எனது முகத்தை ஒரு கணம் பார்த்தது. நானும் பார்த்தேன். அதன்...
நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். பலவிடயங்களைப் பேசு பொருளாக்கக்கூடிய கவிதைகள் நிறைந்த நூல்.
இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன். காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்). என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறி...
Comments
Post a Comment