மலையின் பெயர் என்ன?

வானம் சிவந்து கிடக்கிறது

என நீ சொன்ன
கணத்தில்
நானும் வானம் பார்த்தேன்,
அடர் கருநீலத்தில்
விரியும் சிறு ஒளியுடன்
இருந்தது,
நான் பார்த்த வானம்.
 
மலைமுகட்டின் உச்சியில்
தெரியும் சின்னப் பூவை
பார்க்கச் சொன்னேன்.
பூவை மறைத்து ஒரு
இலை இருப்பதாய்
சொன்னாய் நீ.
 
வடக்கிலிருந்து
காற்று வீச
அதை உன்
மேற்குக் காற்று
என்றாய் நீ.
இடையில்
மலை இருக்கிறது
சொன்னாய் நீ.
 
மலையில் தெறித்து
வண்ணம் மாற
மலையின் உயரம்
பார்வையை மாற்ற
மலையில் பட்டு
காற்றுத் திரும்ப
இடையில் ஒரு மலையிருக்கிறது
சொன்னாய் நீ
 
அப்படியே மலையின்
பெயரைச் சொல்லிவிடு.
அந்த மலையின்
பெயர் என்ன?

Comments

Popular posts from this blog

மழை

மடியில் உறங்கும் பூனை

புத்தகங்களின் எதிரிகள்