Posts

Showing posts from November, 2026

செயற்கை நுண்ணறிவிற்கு தூங்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்

Image
 ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கு நேற்று ஒரு விடயத்தைச் சொல்லிக்கொடுத்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்று அது அதை நினைவில் வைத்திருக்குமா எனக் கேட்டால், விடை: பெரும்பாலும் இல்லை. உரையாடல் முடிந்ததும் அந்தத் தகவலும் மறைந்துவிடும். மாதிரியின் அறிவு, அதன் பயிற்சி முடிந்த நாளோடு உறைந்துபோகிறது. இத்தனை வளர்ச்சிக்குப் பின்னரும் இதுதான் இன்றைய மாதிரிகளின் அடிப்படைக் குறைகளில் ஒன்று. இதற்கு Google Research ஒரு புதிய வழியை முன்வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மாதிரி "தூங்கும்" நேரத்தில் தன் எடைகளைத் (weights) தானே புதுப்பித்துக்கொள்கிறது. ஏன் இது தேவைப்படுகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். புதிதாக ஒன்றைக் கற்பிப்பதற்காக மாதிரியை மீண்டும் பயிற்றுவித்தால், ஏலவே கற்றவற்றை அது மறந்துவிடும் ஆபத்து உண்டு. ஆய்வாளர்கள் இதை catastrophic forgetting என்கிறார்கள். புதிய அறிவைச் சேர்க்கும்போது பழைய அறிவு அழியாமல் இருக்க வேண்டும் என்பதே இங்குள்ள சவால். இந்த புதிய சட்டகத்தின் அடிப்படை சிந்தனை மனித மூளையிடமிருந்து எடுக்கப்பட்டது. பகலில் நாம் கற்றதை, தூக்கத்தின்போது மூளை நீண்டகால நினைவாக ...