Posts

Showing posts from October, 2026

செயற்கை நுண்ணறிவின் வேகமும் மனிதனின் வரம்புகளும்

Image
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளில் பயணித்தது. இறுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றி ஆழமாகப் பேசினோம். "செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இவ்வளவு வேகமாக வளர்கின்றன, பல துறைகளைப் புரட்டிப்போடுகின்றன. அப்படியென்றால், செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே மனித மூளையை விட ஆற்றலில் மிஞ்சிவிட்டதா?" என்ற கேள்வியை அவர் கேட்டார். பல ஆயிரம் மென்பொருளாளர்கள் சேர்ந்து பல வருடங்களாக உருவாக்கிய அடோபி நிறுவனத்தின் மென்பொருட்களை, ஒரு தனிநபர் செயற்கை நுண்ணறிவின் துணையோடு குறுகிய காலத்தில் உருவாக்கியிருப்பதே அவரது கேள்விக்கான காரணம் எனப் புரிந்தது. செயற்கை நுண்ணறிவின் அண்மைக்கால வளர்ச்சி மெய்யாகவே பிரமிக்கத்தக்கது. ஏலவே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்களின் இடைமுகங்களையும் கருவிகளையும் பயன்படுத்தும் நிலையைச் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் எட்டியதிலிருந்து, அவற்றின் வினைத்திறன் ஒரு புதிய தளத்தை அடைந்திருக்கிறது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு மனித மூளையின் ஆற்றலை இன்னமும் மிஞ்சவில்லை. ஆனாலும் ஒரு செயற்கை நுண்ணறிவு முகவரால் மனிதனை விட வேகமாக நிரல் (program) எழுத முடிகிறது. உலகின் சிக்கலான கணிதப் ப...