Posts

பாதீடு 2025: IMF சிறைக்குள் அனுசரித்தலும் பொருந்திப்போதலும்

Image
    ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison ) தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன் கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிதிசார் நெருக்குவாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் இருக்கும் இடர்பாடுகளையும் ஒருசேர படம்பிடித்துக் காட்டுகிறது. “பொருளாதார உறுதிப்பாட்டை கட்டிக்காத்தலும் கடன் மீள்செலுத்தலுக்கான நிலைபேற்றுத்தன்மையை மீட்டெடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தைச் செழிப்படையச் செய்ய முக்கியமாகிறது" எனச் சொன்ன சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அறிக்கையின் வார்த்தை விளையாட்டுக்களில் இருந்த மட்டுப்பாடுகளையும் இந்தப் பாதீடு அம்பலப்படுத்துகிறது. பொருளாதாரத்தின் அடிப்பட்டைக் கட்டுமானங்களை மேம்படுத்தவும், தொழில்துறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை சீர்செய்தலையும், திறன்களை வ...

மலையின் பெயர் என்ன?

வானம் சிவந்து கிடக்கிறது என நீ சொன்ன கணத்தில் நானும் வானம் பார்த்தேன், அடர் கருநீலத்தில் விரியும் சிறு ஒளியுடன் இருந்தது, நான் பார்த்த வானம்.   மலைமுகட்டின் உச்சியில் தெரியும் சின்னப் பூவை பார்க்கச் சொன்னேன். பூவை மறைத்து ஒரு இலை இருப்பதாய் சொன்னாய் நீ.   வடக்கிலிருந்து காற்று வீச அதை உன் மேற்குக் காற்று என்றாய் நீ. இடையில் மலை இருக்கிறது சொன்னாய் நீ.   மலையில் தெறித்து வண்ணம் மாற மலையின் உயரம் பார்வையை மாற்ற மலையில் பட்டு காற்றுத் திரும்ப இடையில் ஒரு மலையிருக்கிறது சொன்னாய் நீ   அப்படியே மலையின் பெயரைச் சொல்லிவிடு. அந்த மலையின் பெயர் என்ன?
என் உரையாடல்களில்  உன்னை நினைவுபடுத்தாத  சொல் ஒன்றைத் தேடுகிறேன்.   ஒன்றுகூடச் சிக்காத  சின்னமொழியா என்னுடையது?  
"கூண்டுக்குளே பிறந்த பறவைக்கு கனவில் வரும் வானமும் கம்பிகளால் வரிந்ததுதானோ..."
நினைவுகூர வருவார்கள். தூபியை உடைத்துவிடுங்கள். துண்டு துண்டாய் கிடக்கிறது.   தூபி இல்லை, அப்போதும் வருகிறார்கள். சட்டத்தின் முதுகில் சாட்டையடி. தடையுத்தரவு கொடுத்துவிட்டோம்.   தடை, இப்போதும் வருகிறார்கள். ஓடு... ஓடிப்போ, சாலையின் குறுக்கே தடுப்பு போடு. அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கேள். என்ன நடந்தாலும் பரவாயில்லை... நினைவுத் தீ எரியவே கூடாது. ஓடு... ஓடிப்போ...   என்ன தீ எரியவில்லைத்தானே... சொல்... வெற்றிதானே... வென்றோம் தானே...   ... ... ... ...   அத்தனை பயந்தவர்களா நீங்கள். உடைந்துபோய்க் கிடக்கும் எளிய மனிதர்களின் கண்ணீர்த் துளிகளுக்கே தொடை நடுங்குகிறீர்களே...

மழை

Image
குட்டிகள் ஈன்றிருந்த குழியில் இருந்து ஒவ்வொன்றாய்க் கவ்வி மேட்டுக்குச் செல்கிறது ஒரு நாய்   சரிந்து விழப் போகும் திட்டின் ஓரத்து வீட்டின் கூரைக்குள்ளே கட்டியிருந்த கூட்டில் வைத்திருக்கும் முட்டைகளை காவிச் செல்லமுடியாமல் பொறுமிக் கொண்டிருக்கிறது ஒரு புறா   காதில் இசைக் கொழுவியும் கையில் தேனீர்க் கோப்பையும் தரித்திருக்கும் எஜமானின் மடியில் படுத்திருக்கிறது ஒரு பூனை   உண்மைதான் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாய்ப் பெய்கிறது மழை.

நீந்தத் தெரியாத கனவுகள்

Image
புத்தகப் பை அடுக்கத் தெரிந்தவர்களுக்கு நீந்தத் தெரியாததுதான் குற்றம் என்று தேவையற்றதை திறக்கும் விழாக்களில் அவர்கள் பேசக் கூடும்.   தாங்களே அதிக பாலங்கள் கட்டியதாகவும் சான்றாக அவர்களது வண்ணமய மாளிகைகளை நாங்கள்தான் சிறப்பாய் செய்தோம் என்கிற வார்த்தைகளோடு அவர்கள் காட்டக் கூடும்.   அவர்கள்தான் இவர்கள்தான் என இரண்டு பக்கங்களில் இருந்தும் கைகள் நீளக் கூடும்.   நாளைய அனர்த்தத்தை இன்றே தடுக்க நகரங்களின் மத்தியில் சில நீச்சல்குளங்களும் நீச்சல் வகுப்புகளும் உருவாகவும் கூடும்.   மக்களை அமைதியாக்க இறந்தவர்களுக்கான ஒரு புதிய தூபியை அவர்கள் முன்மொழிவார்கள் அது கட்டப்படப் போகும் விளையாட்டு மைதானத்தின் மூலையிலோ அல்லது கட்டிமுடித்த புது விகாரையின் புனிதத்தை குழைக்காது எல்லைக்கு வெளியேயோ எழுப்பப்பட்டு நீந்தத் தெரியாத கனவுகள் என பெயர் சூட்டப்படக் கூடும்.   மக்களைக் காத்தல் என்கிற ஒன்றைத் தவிர இந்த சபிக்கப்பட்ட தேசத்தில் எல்லாமும் நடக்கக் கூடும்.

பொய்களை பிரசவிக்கும் உண்மைகள்

Image
  இப்போதெல்லாம் உண்மை என்கிற சொல்லை புத்திசீவிகள் அழுத்திக் கூறும் பொழுதுகளில் இரண்டு அடி தள்ளி நிற்கவே விரும்புகிறேன்.   கூட்டமொன்றில் மேடையின் மேலிருந்தோ அல்லது மேடையை நோக்கியோ உண்மை என்கிற சொல் புறப்படுகையில் எனக்கு அச்சமாயிருக்கிறது.   தரவு என்கிற சொல்லை எப்படிக் கொச்சைப் படுத்தினார்களோ அப்படியே உண்மைக்கும் செய்கிறார்கள் புத்திசீவிகள்.   இரண்டு மூன்று உண்மைகளைத் தேடிப் பிடித்து உண்மையை சுமக்கும் கூற்றின் பின்னால் சேர்கிற காற்புள்ளியை அடித்து விரட்டிவிட்டு முற்றுப்புள்ளிகளை வைக்கிறார்கள்.   காற்புள்ளிக்களை பறிகொடுத்த உண்மைகள் புத்திசீவிகள் கழுவேற்றி விடுவார்களோ என்கிற பயத்தில் அவர்களுக்கு வேண்டிய பொய்களை அப்பாவிகளின் கண்கள் முன்னே பிரசவித்து நிதர்சனமான உண்மைகள் என்று பட்டம் வழங்கும்.   பொய்களைப் பிரசவிக்கும் பலவீனமான உண்மைகளை நான் வெறுக்கிறேன் என்று சத்தமாகக் கத்தப் பார்த்தேன்.   "நீ இப்போது கத்தி, பொருளாதாரம் தெரியாத முட்டாள் என்று ஒரு நிதர்சனமான உண்மையைப் பிரசவிக்க வைக்கப் போகிறாயா?" மேடையில் இருந்த புத்திசீவிகளுக்குப் பயந்து கதிரைக்கு அடியிலிருந்...

விலைவாசி அல்லது திருட்டு

Image
    ஒருவருக்கு ஒன்றென ஐந்து முட்டைகளுக்கு காசை ஒதுக்கினேன். நான்கை நாங்கள் சாப்பிட்டோம். ஒன்றை அரசாங்கம் சாப்பிட்டது.

தெய்வத்தின் நாக்கு

Image
    "இந்தக் கதய இதோட நிப்பாட்டினா எல்லாருக்கும் நல்லம். தாரதத் தீண்டுபோட்டு ஒரு மூலையில் கிடக்கவேணும். எனக்கு யாரும் படிப்பிக்க வெளிக்கிட வேணாம்"  பாக்கியத்தின் முகத்தில் அடித்தபடி சொல்லிவிட்டு மோட்டார் வண்டியை உதைக்கத் தொடங்கினார் ராஜேந்திரன். வண்டியை இயக்க அவர் உதைத்த ஒவ்வொரு உதையையும் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் முந்தய கணத்தில் மகனிடம் வாங்கிய பேச்சிலிருந்து இன்னமும் வெளிவரமுடியாமல் இருக்கும் தாய். சொற்கள் விழுந்த வேகமும் இப்போது உதை விழுகிற வேகமும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடாத்த முடிவெடுத்தால் காலின் விசை இயந்திரத்தை போய்ச் சேர முன்னர் பாக்கியத்தின் இதயத்தில் மகன் சொன்ன சொற்கள் குறைந்தது ஆயிரம் ஈட்டிகளையாவது இறக்கியிருக்கும். தன் மகனிடமிருந்து அவரை நோக்கி இத்தனை வெம்மையான சூடு சொற்கள் வந்தது இதுவே முதல் முறை. "அலாட்டாமல் கிடவுங்கோவன்", "வயசுபோன காலத்தில சும்மா கிடந்தால் நல்லம்" என்று ராஜேந்திரனின் வாயில் இருந்து அடிக்கடி உதிரும் சொற்கள் சுடுவதைவிட இந்தச் சொற்கள் பாக்கியத்தை அதிகம் சுட்டுவிட்டன. பாக்கியத்தின் இமைகள் இன்னமும் வ...

சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 2

Image
அணிலை என்னவென்று அழைப்பாய்? தென்னை மரத்தின் வட்டுகளுக்கு நடுவில் இருந்து இறங்கி வருகிறது, பாதி வளர்ந்த அணில் ஒன்று. பிள்ளைப்பருவம் கடந்த அணில். அது இறங்கும் வேகம் சொல்லிவிடுகிறது கூட்டைத் தாண்டிய அதன் அனுபவத்தின் மட்டுப்பாட்டை. அது பயந்து பயந்துதான் இறங்குகிறது. வளவின் ஒரு மூலையில் இருக்கும் தென்னையில் இருந்து இன்னொரு மூலையில் இருக்கும் கொய்யாவிற்கு செல்லவேண்டும். பைய இறங்கிவருகிறது. பைய நடை போடுகிறது. உண்மையில் அதைப் 'பையப் பாய்தல்' என்று சொல்ல விரும்புகிறேன். அந்த நடையில் அல்லது தவழுகையில் ஒரு அமைப்பு முறை இருக்கிறது, அது ஒரு தோரணம். தென்னை மரத்தின் தண்டில் இருந்து கால்களை சின்னதாய் உயர்த்தி சின்னதாய் நகர்த்தி வேகமாய் சில அடிகள். அப்படியே நிறுத்தி மரத் தண்டோடு ஒரு கணம் ஒட்டிப் படுக்கை. தலைதூக்கி சுற்றிப் பார்த்து ஆபத்தைக் கணித்து சிறிதாய் ஒரு பாய்ச்சலைத் தொடர்ந்து வேகமாயச் சில சின்ன அடிகள், பின்னொரு படுக்கை. பையப் பாய்தல் இது. மரத்திலிருந்து மதிலுக்கு தாவல். பின் மதிலிலும் பையப் பாய்தல். தோரணத்தை ஒத்த நடை. அதன் வாலாட்டாலும் தோரணமே. சுவற்றிலலோ மரத்திலோ ஒட்டிப் படுத்து அசையாது ...

சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 1

Image
  சொற்கள் பயனற்றுப் போகும் உரையாடல் தேவையான பொழுதோன்றில் கிடைக்காதுபோகும் பொருத்தமான சொல், தேவையில்லாது ஒரு வசனத்தில் வந்து சேர்ந்து சங்கடம் தரும் பொருத்தமற்ற சொல் என ஒற்றைச் சொல்லால் சிக்கலாக்கிப் போகின்றன பல உரையாடல்கள்.  மொழியின் கரையில் குதித்து ஒரு சுழியோடி போல மொழியின் ஆழம் அளந்து இலாவகமாய் மேலெழுந்து வருகின்ற அளவுக்கு மொழியில் தேர்ச்சி கண்டவர்கள் கூட ஒரு சில சொற்களுக்குத் தன்னும் சறுக்கியே விடுகின்றனர். சொற்கள் அத்தனை உயர்ந்த சறுக்குமரமோ என்னவோ. சொற்களைக் கோர்த்து விளையாடும் விளையாட்டு, சொற்களின் மேலே பழி போட்டுத் தப்பித்துக்கொள்ளும் விளையாட்டு என்று பல விளையாட்டுக்கள் நடக்கும் உரையாடல்கள் அதிகம். ஒரு உரையாடலையே தரித்து நிற்கவைக்கும், திசைமாற்றும், நிலை குலைக்கும் இல்லையேல் நிறுத்தியே விடுகின்ற ஒற்றைச் சொற்களின் பொதுத்தன்மையை நீங்கள் எப்போதாவது ஆராய்ந்ததுண்டா?  அப்படி ஆராய வைத்த கடைசிச் சொல் என்ன என்று ஞாபகம் இருக்கிறதா நான் சில சமயத்தில் மேலோட்டமாய் சிந்தித்திருக்கிறேன். தேவையானபோது வராமல் மூளையின் அடியாளத்தில் ஒழிந்து கொண்ட சொற்களை, இதோ வாய் வரைக்கும் வந்துவிட்டத...

நிறக்குருடனின் மடல்

Image
அன்புள்ள அனுர, ஒரு அப்பாவி நிறக்குருடனின் மடல் இது நீங்கள் இப்போது ஒரு புதிய நிறத்தை வரிந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் எனக்கு முன்னமும் நிறக் குருடு இருந்ததால் உங்கள் பழைய நிறத்தையும் என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை மன்னிக்கவும். இப்போது இந்தக் கடிதத்தை நீங்கள் வரித்திருக்கும் நிறத்தை அறியவேண்டி வரைகிறேன். அன்புள்ள அனுர இப்போதும் நீங்கள் எல்லா இனவாதமும் ஒரேமாதிரியானவை என்றுதானா சொல்கிறீர்கள்? பேரினவாத என்ற சொல்லுக்கு இணையான சிங்களச் சொல்லை நீங்கள் இன்னமும் கண்டடையவில்லையா? எட்டை ஒன்பதாக்கியதை இப்போதும் கூட்டங்களில் பெருமையடிக்கிறீர்களா அனுர? பழைய (போர்க்)குற்றம் பற்றியும் புதிய (போர்த்)தளபதி பற்றியும் எப்போது பேசுவீர்கள் அனுர? சிதறிய தலைகள் அதைப் பார்த்து அழுத கண்கள் காணாமற்போன உறவுகள் அதைப் பார்க்கக் கிடைக்காது அழுத கண்கள் குதறப்பட்ட உடல்கள் அதைப் பார்க்க முடியாது மூடி அழுத கண்கள் எப்போது நீங்கள் பார்ப்பீர்கள் அனுர? எப்போது பேசுவீர்கள்? எப்போது அனுர? தமிழர்களுக்கு தீர்வு எனக் கேட்டால் சுயநிர்ணயம் சுயாட்சி என்ற சொற்கள...