Posts

Showing posts from June, 2018

இசையும் இளந்தளிரும்

Image
இசை இப்போதுதான் இயற்கையை ரசிக்கப் பழகிக்கொண்டிருந்தான். அவன் இன்னும் மழலை மாறாதவன். ஒரு பசுந்தளிர். மூன்றே வயது. அவன் பிறந்ததில் இருந்தே மரங்களுடனும் மலர்களுடனும்தான் வளர்ந்தான். அவனது புருவங்களின் அருகே வைக்கப்பட்ட திருஷ்டி இலைகள் தொடக்கி அவன் வருடும் செம்பருத்திப் பூ வரை, அவனைச்சுற்றி இயற்கை நிறைந்திருந்தது. வாடிய பூக்களை வருடி உயிர்கொடுப்பான். வளைந்து விழும் சிறு செடி நிமிரும்வரை அதை தாங்கிப் பிடித்தபடி நிற்பான். இயற்கையின் வண்ணத்தில் சேர்ந்த புது வண்ணம் அவன். சூழ எது இருக்கிறதோ அதையே பார்த்துக் குழந்தைகள் வளர்வதாய்ச் சொல்வது எவ்வளவு உண்மை. இயற்கையைக் காதலிக்கும் நபர்கள் சூழ அவன் வளர்ந்தான். இயற்கையை வெறும் வளமாகவும் ரசனைப் பண்டமாகவும் பார்க்கும் உலகில் இயற்கை அன்புக்காய் ஏங்குவதைக் காண்கின்ற கண்கள் வெகு குறைந்துவிட்டன. இசையினுடைய கண்களும் அப்படியானவையே. அவன் பிறந்ததிலிருந்து அவனது பிஞ்சுக் கைகளைப்பிடித்து நாட்டப்பட்ட மரங்கள் ஏராளம். அவன் நடக்கத்தொடங்கிய வயதிலேயே தன் பிஞ்சுக் கைகளால் ஒரு குட்டிக் கோப்பையில் தண்ணீரை எடுத்து குடுகுடுவென ஓடிப்போய் அந்தச் செடிகளுக்கு தண்ண