Posts

Showing posts from September, 2018

அதீதனை மீள்வரைதல்

Image
ஒன்றுக்கு தொடர்ச்சியாக மரணம் சம்பவித்துக்கொண்டிருந்தால், அது தொடர்ச்சியாக தனக்கு நடக்கும் ஒன்றை மரணமாக வரைவிலக்கணம் செய்துவைத்திருக்கிறது என்று பொருள். அப்படித்தான் தனக்கு அடிக்கடி மரணம் சம்பவிப்பதாத அதீதன் நினைத்துக்கொண்டிருந்தான். அதீதன் என்கிற பிம்பத்தை முற்றிலுமாக கொலை செய்தல் பற்றியும் அவன் சிந்தித்திருந்தான். ஆனால் அதீதனின் மரணத்தையும் அதீதனைக் கொல்லவேண்டிய தேவையையும் பற்றி அவன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டான். அதீதன் என்பது ஒரு கற்பனை உருவம் என்கிற எண்ணமும் அதை ஆக்கியவர் அதைப் புறக்கணிக்கையில்தான் மரணங்கள் தொடர்ந்து நிகழ்வதாய் அவன் கொண்டிருந்த எண்ணமும் எத்தனை தவறானது. அதீதனுக்கு, அதீதன் என்கிற பெயர் வழங்கப்பட்டிருக்காவிட்டாலும் அவன் அதீதானாய்த்தான் இருந்திருப்பான் என்கிற உண்மை அவனுக்கு தெரிவதற்கு இந்த ஒரு வார வெறுமை அவனுக்கு தேவைப்பட்டிருக்கிறது. வெறுமையும் கண்ணீரும் கேள்விகளும் உறவுகளும் அவனுக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கின்றன. அவன் அதீதன் எனப் பெயர் சூட்டப்பட முன்னர் செய்யாத எந்த வேலையை அந்தப் பெயர் சூட்டலின் பின் செய்திருக்கிறான். பெயர் சூட்டப்பட முன்னர் செய்த

மெய் நீ

Image
குறிப்பு: ரிச்சட் ஸ்டால்மனின் "Made for You" என்கிற விஞ்ஞானப் புனைவின் மொழிபெயர்ப்பே இது. அதிகம் கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கொஞ்சம் பொறுமையோடு வாசிக்க வேண்டுகிறேன். பயன்படுத்தப்பட்ட சில முக்கிய கலைச்சொற்களை முன்னமே குறிப்பிடுவது வாசிப்பை இலகுவாக்கும் என நம்புகிறேன். virtual - மெய்நிகர் programming-  நிரலாக்கம் reprogramming- மிள்நிரலாக்கம் virtual mind - மெய்நிகர் மூளை virtual adjunct - மெய்நிகர் இணைப்பு, மெய்நிகர் பிரதி சிறுகதைக்கு பொருந்தும் வகையிலும் வாசகர்களின் இலகு புரிதலுக்காகவும் கலைச்சொல் பயன்பாட்டில் இயலுமானவரையில் இலகு நடையை பின்பற்றியிருக்கிறேன். ********************************************************************************** “அப்பழுக்கில்லாத ஒருவர் இந்த இயற்கையில் இல்லை. அப்படியான துணை உங்களுக்கானவராய் வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். தயார்செய்து தருகிறோம்.” ‘துணை’ நிறுவனத்தின் இந்த விளம்பரத்தை வாசிக்கும், வயது போய்க்கொண்டிருக்கும், காதல் மேகம் மீண்டும் தன்னைக் கடக்கும் என்ற நம்பிக்கையும் தொலைந்துபோன ஒருவனுக்கு ஆர்வம் பிறப்பது ஆச்சர