Posts

Showing posts from June, 2019

ஆக்கிரமிப்பு

Image
எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தான் அமரும் நாட்காலிகளை தனது என்று அடம்பிடிக்கும். அருகில் போனால் உறுமும். பயமுறுத்தி கதிரையில் ஒய்யாரமாய் சுருண்டு படுக்கும். சிலகாலம் முன்பு சிறுநீரை அதன் உடமையை நிறுவும் கருவியாய் அது பயன்படுத்திய நினைவு இருக்கிறது. சரியாய் சொல்வதானால்  அந்தச் சிலகாலம் ஒரு தசாப்தமாக இருக்கலாம். நிலத்தை கால்களால் தோண்டி தானே வைத்த எலும்புகளை மீளத்தோண்டி அந்த இடத்திலேயே படுத்துக் கிடக்கும் பழக்கமும் இன்றளவும் இருக்கிறது. பற்கள் நறுக உறுமும் வாய் நிலம் தோண்டும் கால்கள் சிறுநீர் கழிக்கும் குறி என உறுப்புகள் வெறும் உத்திகளே செயல் மட்டும் எல்லாக் காலத்திலும் ஒன்றே.

கடவுள் இருப்பாராக...

மரணமும் மரணத்தின் மீதான பயமும் மரணத்தின் பின்னரான நிச்சயமின்மை குறித்த அச்சமும்தான் கடவுளை இன்று வரை காப்பாற்றி கொண்டிருக்கிறது, என நீண்ட காலத்திற்கு முன்பு வரை நம்பியிருந்தேன். ஆனால் அது உண்மையாகத் தெரியவில்லை. மனிதர்கள் மரணத்தை விடவும் வாழ்வைப் பார்த்தே மிகவும் அஞ்சுகிறார்கள். கையறு நிலை தான் கடவுளையும் கோயில்களையும் இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை. எங்களுக்கு ஒரு துன்பம் வரும்போத ு எங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அதை சொல்வதற்கு இன்னொருவரை தேடுகிறோம். நாங்கள் எங்களது பிரச்சினையை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அதை தங்களுடைய பிரச்சனைகளுடன் ஒப்பிட்டு இதற்காகவா கவலைப்படுகிறாய் என்று சொல்லாத ஒரு நபரை, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, உனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, இது நீயாக தேடி கொண்டது என்று சொல்லாத ஒரு நபரை நாங்கள் எல்லோரும் தேடுகிறோம். குறைந்தபட்சம் நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபரை தேடுகிறோம்.  அப்படியான மனிதர்கள் எ