Posts

Showing posts from July, 2021

சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 2

Image
அணிலை என்னவென்று அழைப்பாய்? தென்னை மரத்தின் வட்டுகளுக்கு நடுவில் இருந்து இறங்கி வருகிறது, பாதி வளர்ந்த அணில் ஒன்று. பிள்ளைப்பருவம் கடந்த அணில். அது இறங்கும் வேகம் சொல்லிவிடுகிறது கூட்டைத் தாண்டிய அதன் அனுபவத்தின் மட்டுப்பாட்டை. அது பயந்து பயந்துதான் இறங்குகிறது. வளவின் ஒரு மூலையில் இருக்கும் தென்னையில் இருந்து இன்னொரு மூலையில் இருக்கும் கொய்யாவிற்கு செல்லவேண்டும். பைய இறங்கிவருகிறது. பைய நடை போடுகிறது. உண்மையில் அதைப் 'பையப் பாய்தல்' என்று சொல்ல விரும்புகிறேன். அந்த நடையில் அல்லது தவழுகையில் ஒரு அமைப்பு முறை இருக்கிறது, அது ஒரு தோரணம். தென்னை மரத்தின் தண்டில் இருந்து கால்களை சின்னதாய் உயர்த்தி சின்னதாய் நகர்த்தி வேகமாய் சில அடிகள். அப்படியே நிறுத்தி மரத் தண்டோடு ஒரு கணம் ஒட்டிப் படுக்கை. தலைதூக்கி சுற்றிப் பார்த்து ஆபத்தைக் கணித்து சிறிதாய் ஒரு பாய்ச்சலைத் தொடர்ந்து வேகமாயச் சில சின்ன அடிகள், பின்னொரு படுக்கை. பையப் பாய்தல் இது. மரத்திலிருந்து மதிலுக்கு தாவல். பின் மதிலிலும் பையப் பாய்தல். தோரணத்தை ஒத்த நடை. அதன் வாலாட்டாலும் தோரணமே. சுவற்றிலலோ மரத்திலோ ஒட்டிப் படுத்து அசையாது

சுதந்திரத்தின் இரண்டு அறைகள் - அத்தியாயம் 1

Image
  சொற்கள் பயனற்றுப் போகும் உரையாடல் தேவையான பொழுதோன்றில் கிடைக்காதுபோகும் பொருத்தமான சொல், தேவையில்லாது ஒரு வசனத்தில் வந்து சேர்ந்து சங்கடம் தரும் பொருத்தமற்ற சொல் என ஒற்றைச் சொல்லால் சிக்கலாக்கிப் போகின்றன பல உரையாடல்கள்.  மொழியின் கரையில் குதித்து ஒரு சுழியோடி போல மொழியின் ஆழம் அளந்து இலாவகமாய் மேலெழுந்து வருகின்ற அளவுக்கு மொழியில் தேர்ச்சி கண்டவர்கள் கூட ஒரு சில சொற்களுக்குத் தன்னும் சறுக்கியே விடுகின்றனர். சொற்கள் அத்தனை உயர்ந்த சறுக்குமரமோ என்னவோ. சொற்களைக் கோர்த்து விளையாடும் விளையாட்டு, சொற்களின் மேலே பழி போட்டுத் தப்பித்துக்கொள்ளும் விளையாட்டு என்று பல விளையாட்டுக்கள் நடக்கும் உரையாடல்கள் அதிகம். ஒரு உரையாடலையே தரித்து நிற்கவைக்கும், திசைமாற்றும், நிலை குலைக்கும் இல்லையேல் நிறுத்தியே விடுகின்ற ஒற்றைச் சொற்களின் பொதுத்தன்மையை நீங்கள் எப்போதாவது ஆராய்ந்ததுண்டா?  அப்படி ஆராய வைத்த கடைசிச் சொல் என்ன என்று ஞாபகம் இருக்கிறதா நான் சில சமயத்தில் மேலோட்டமாய் சிந்தித்திருக்கிறேன். தேவையானபோது வராமல் மூளையின் அடியாளத்தில் ஒழிந்து கொண்ட சொற்களை, இதோ வாய் வரைக்கும் வந்துவிட்டது என்று சொல்லி