Posts

Showing posts from August, 2019

நிறக்குருடனின் மடல்

Image
அன்புள்ள அனுர, ஒரு அப்பாவி நிறக்குருடனின் மடல் இது நீங்கள் இப்போது ஒரு புதிய நிறத்தை வரிந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் எனக்கு முன்னமும் நிறக் குருடு இருந்ததால் உங்கள் பழைய நிறத்தையும் என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை மன்னிக்கவும். இப்போது இந்தக் கடிதத்தை நீங்கள் வரித்திருக்கும் நிறத்தை அறியவேண்டி வரைகிறேன். அன்புள்ள அனுர இப்போதும் நீங்கள் எல்லா இனவாதமும் ஒரேமாதிரியானவை என்றுதானா சொல்கிறீர்கள்? பேரினவாத என்ற சொல்லுக்கு இணையான சிங்களச் சொல்லை நீங்கள் இன்னமும் கண்டடையவில்லையா? எட்டை ஒன்பதாக்கியதை இப்போதும் கூட்டங்களில் பெருமையடிக்கிறீர்களா அனுர? பழைய (போர்க்)குற்றம் பற்றியும் புதிய (போர்த்)தளபதி பற்றியும் எப்போது பேசுவீர்கள் அனுர? சிதறிய தலைகள் அதைப் பார்த்து அழுத கண்கள் காணாமற்போன உறவுகள் அதைப் பார்க்கக் கிடைக்காது அழுத கண்கள் குதறப்பட்ட உடல்கள் அதைப் பார்க்க முடியாது மூடி அழுத கண்கள் எப்போது நீங்கள் பார்ப்பீர்கள் அனுர? எப்போது பேசுவீர்கள்? எப்போது அனுர? தமிழர்களுக்கு தீர்வு எனக் கேட்டால் சுயநிர்ணயம் சுயாட்சி என்ற சொற்கள