Posts

Showing posts from August, 2018

ஒலிவாங்கிகளை அருகில் இருக்கும் பெண்களிடம் கொடுங்கள்.

பெண்களுக்கு எதிரான குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்கிற அறிமுகத்துடன் ஒரு குறும்படம் கண்ணில் பட்டுத்தொலைத்தது. Behindwoods இன் Your Shamefully என்கிற தலைப்பிடப்பட்ட சுமார் 40 லட்சம் பேர் பார்த்த படம். "பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துக் கொல்வதற்கு இன்று நாங்கள் தவறினால், வரும்காலத்தின் குடும்பங்கள் பெண்குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவார்கள். அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் பெரிய மனதுடைய குடும்பங்கள் மட்டுமே பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள். அதனால் 2060, 2070 களில் பெண்களின் தொகை பாதியாகக் குறைந்து போகும். இந்த சூழல் ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து ஒரே கட்டிலில் உடலுறவு கொள்ளவேண்டிய நிலையை உருவாகும். ஆகவே பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.” என்று சொல்லிப் போகிறது படம். இந்த ஆணாதிக்க குறும்படம் திரைமறைவில் மீளச் சொல்லும் செய்தியை உற்றுக் கவனித்தால், செய்தி இப்படி வருகிறது, "பெண்கள் உயிர்கள் என்கிற காரணத்துக்க

பொய்கள் உதிர்க்கும் புத்தன்

எனக்குப் பிடிக்காதவொரு புத்தனை எனது மேசையில் வைத்திருக்கிறேன். இரண்டங்குல உயரம் பழுப்பு வண்ண உடலை உலோக வண்ணத் துணியால் போர்த்திய ஒரு சிறிய புத்தன்.  அமர்ந்தபடி அமைதிசூழந்த கண்களின் கீழே புன்னகை பூக்கும் உதடுகளால் கதை பேசும் எனக்குப் பிடிக்காத என் மேசைப் புத்தன் கதை பேசும் உதடுகளால் தினமும் பொய் பேசுகிறான் என்னிடம். அமைதி தொலைந்து மேசைமுன் அமரும் என்னிடம் அவன் சொல்லும் அந்தப் பொய்கள் கொடுமையானவை. "பற்றற்றிரு... அமைதி காண்பாய்" "அமைதியை உள்ளே தேடு..." "கர்மா... நீதான் காரணம்..." புன்னகையுடன் இத்தனை வலிமிகு சொற்களைச் சொல்ல அவனால் எப்படி முடிகிறதோ உலகென்றொன்று இருப்பதையும் ஒடுக்குமுறைகள் நடப்பதையும் ஒரு சொல்லாலும் சுட்டாது என்னை பற்றறிருக்க சொல்லுகிறான் கண்களை என்றைக்கும் திறந்திராத என்னை என்றுமே கண்டிராத என் மேசைப் புத்தன். நல்லவேளை அவன் வெறும் புத்தனாய்ப் போனான். பொய்களை உதறி என்னால் என்னால் நடக்க முடிகிறது. என் மேசைப் புத்தன் புத்தபெருமானாய் போயிருந்தால்...