அதீதனை மீள்வரைதல்

ஒன்றுக்கு தொடர்ச்சியாக மரணம் சம்பவித்துக்கொண்டிருந்தால், அது தொடர்ச்சியாக தனக்கு நடக்கும் ஒன்றை மரணமாக வரைவிலக்கணம் செய்துவைத்திருக்கிறது என்று பொருள். அப்படித்தான் தனக்கு அடிக்கடி மரணம் சம்பவிப்பதாத அதீதன் நினைத்துக்கொண்டிருந்தான். அதீதன் என்கிற பிம்பத்தை முற்றிலுமாக கொலை செய்தல் பற்றியும் அவன் சிந்தித்திருந்தான். ஆனால் அதீதனின் மரணத்தையும் அதீதனைக் கொல்லவேண்டிய தேவையையும் பற்றி அவன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டான்.

அதீதன் என்பது ஒரு கற்பனை உருவம் என்கிற எண்ணமும் அதை ஆக்கியவர் அதைப் புறக்கணிக்கையில்தான் மரணங்கள் தொடர்ந்து நிகழ்வதாய் அவன் கொண்டிருந்த எண்ணமும் எத்தனை தவறானது. அதீதனுக்கு, அதீதன் என்கிற பெயர் வழங்கப்பட்டிருக்காவிட்டாலும் அவன் அதீதானாய்த்தான் இருந்திருப்பான் என்கிற உண்மை அவனுக்கு தெரிவதற்கு இந்த ஒரு வார வெறுமை அவனுக்கு தேவைப்பட்டிருக்கிறது. வெறுமையும் கண்ணீரும் கேள்விகளும் உறவுகளும் அவனுக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கின்றன.

அவன் அதீதன் எனப் பெயர் சூட்டப்பட முன்னர் செய்யாத எந்த வேலையை அந்தப் பெயர் சூட்டலின் பின் செய்திருக்கிறான். பெயர் சூட்டப்பட முன்னர் செய்த எந்த வேலையை அந்தப் பெயர் சூட்டலின் பின் செய்யாதிருந்தான். அப்படியிருக்க பிறப்பு இறப்பு என்கிறவைகளோடு உருவாகின்ற வீண் குழப்பங்களில் இருந்து வெளியேற அவன் தன்னை மீள வரையறை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த மீள் வரைதல் அதீதன் என்பது ஒரு பெயர் மாத்திரமே என்பதை உணர்வதில் இருந்து தொடங்குகிறது.

அவனது மீள் வரைவு என்பது அவனது நோக்கங்களோடும் செயல்களோடும் சேர்த்து நீளக்கூடிய ஒன்றாக அல்லவா இருக்கமுடியும். சுற்றி இருக்கும் உறவுகளோடும் தோழமைகளோடும் சேர்த்தல்லவா அது விரியும். இந்த பரந்த சிந்தனையோடு சேர்த்தே அதீதன் தன்னை மீள்வரைதலில் இறங்கியிருக்கிறான்.

உறவுகளும் தோழமைகளும் புடைசூழ மக்கள் இலக்கிய பாதையில் பயணிக்கப்போகும் சாதாரண ஒருவன் என்கிற மீள் வரைதலாக அது இருக்கிறது.

-அதீதன்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?