சிகப்பை கண்டு அஞ்சுங்கள் நண்பரே...

சிகப்பை கண்டு அஞ்சுங்கள் நண்பரே
ஏனெனில் அது உங்கள் தலைவர்களை
கனவிலும் நினைவிலும் பயமூட்டும் நிறம்

சிகப்பைக் கண்டு அஞ்சுங்கள் நண்பரே
அது உங்கள் தலைவர்களின்
சுய நிறத்திற்கு எதிரான நிறம்

சிகப்பைக் கண்டு அஞ்சுங்கள் நண்பரே
அது உங்கள் தலைவர்களின் முகத்திரைகளையும்
சிலவேளை உங்கள் முகத்திரைகளையும் கிழிக்கும் நிறம்

சிகப்பைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குங்கள் நண்பரே
உங்கள் தலைவர்களில் எஜமான்களுக்கு
பிடிக்காத நிறம்.

சிகப்பை கையில் ஏந்துங்கள் தோழரே
அது உங்களின் நிறம்
எங்களின் நிறம்
எங்கள் விடுதலையின் நிறம்

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?