மழை


குட்டிகள் ஈன்றிருந்த
குழியில் இருந்து
ஒவ்வொன்றாய்க் கவ்வி
மேட்டுக்குச் செல்கிறது
ஒரு நாய்
 
சரிந்து விழப் போகும்
திட்டின் ஓரத்து வீட்டின்
கூரைக்குள்ளே கட்டியிருந்த
கூட்டில் வைத்திருக்கும்
முட்டைகளை காவிச் செல்லமுடியாமல்
பொறுமிக் கொண்டிருக்கிறது
ஒரு புறா
 
காதில் இசைக் கொழுவியும்
கையில் தேனீர்க் கோப்பையும்
தரித்திருக்கும் எஜமானின்
மடியில் படுத்திருக்கிறது
ஒரு பூனை
 
உண்மைதான்
ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாய்ப் பெய்கிறது
மழை.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?