நினைவுகூர வருவார்கள்.
தூபியை உடைத்துவிடுங்கள்.
துண்டு துண்டாய் கிடக்கிறது.
 
தூபி இல்லை, அப்போதும் வருகிறார்கள்.
சட்டத்தின் முதுகில் சாட்டையடி.
தடையுத்தரவு கொடுத்துவிட்டோம்.
 
தடை, இப்போதும் வருகிறார்கள்.
ஓடு... ஓடிப்போ,
சாலையின் குறுக்கே தடுப்பு போடு.
அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கேள்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை...
நினைவுத் தீ எரியவே கூடாது.
ஓடு... ஓடிப்போ...
 
என்ன தீ எரியவில்லைத்தானே...
சொல்... வெற்றிதானே...
வென்றோம் தானே...
 
...
...
...
...
 
அத்தனை பயந்தவர்களா நீங்கள்.
உடைந்துபோய்க் கிடக்கும் எளிய மனிதர்களின் கண்ணீர்த் துளிகளுக்கே தொடை நடுங்குகிறீர்களே...

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?